தென்கொரியாவில் 13 மாடிக் கட்டடத்திலிருந்து விழுந்த யுவதி – சிறுமி ஒருவருக்கு நேர்ந்த துயரம்

தென்கொரியாவில் 13 மாடிக் கட்டடத்திலிருந்து பதின்ம வயது யுவதி கீழே விழுந்ததில் அவ்வழியாகச் சென்றுகொண்டிருந்த 11 வயதுச் சிறுமி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் கியோங்கி மாநிலத்தில் நேற்று மதியம் உயிரிழந்துள்ளது. சிறுமி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சிறுமியுடன் நடந்து சென்றுகொண்டிருந்த 45 வயதுத் தாயாருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
சம்பவத்தின்போது 23 வயது நபர் ஒருவருக்கும் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. கட்டடத்திலிருந்து கீழே விழுந்த 18 வயதுப் பெண் மனநல சிகிச்சை பெற்றுவந்ததாகக் கூறப்பட்டது.
அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபடுவதற்கான எந்த அறிகுறியும் கண்டுபிடிக்கப்படவில்லை. சம்பவம் குறித்த விசாரணை தொடர்வதாக பொலிஸார் தெரிவித்துள்ளார்.
(Visited 1 times, 1 visits today)