உலக வர்த்தகப் போரில் யாருக்கும் வெற்றி கிடைக்காது – சீனா அறிவிப்பு

உலக வர்த்தகப் போரில் யாருக்கும் வெற்றி கிடைக்காது – சீனா அறிவிப்ப
உலக வர்த்தகப் போரில் யாருக்கும் வெற்றி கிடைக்காது என சீனா மீண்டும் அறிவித்துள்ளது.
சீனத் தலைநகர் பெய்ச்சிங்கில் நடைபெறும் 13ஆவது உலக அமைதி மாநாட்டில் சீனத் துணை ஜனாதிபதி ஹான் ஸெங் இதனை குறிப்பிட்டுள்ளார்.
வர்த்தக வரிப் போர்களில் வென்றவர் இல்லை என சீனத் துணை ஜனாதிபதி ஹான் ஸெங் குறிப்பிட்டுள்ளார்.
உலக வர்த்தகம் சுமுகமாக நடைபெற வேண்டுமானால் பல நாட்டு வர்த்தக முறையைக் கட்டிக்காப்பதே நல்லது என்று அவர் குறிப்பிட்டார்.
உலக நாடுகள் வரி குறித்த பேச்சுவார்த்தையை முடிப்பதற்கு அமெரிக்கா வரும் 9ஆம் திகதி வரை காலக்கெடு விதித்திருக்கிறது.
உலக அமைதியையும் வளப்பத்தையும் நாடுமாறு கூறிய சீனத் துணை ஜனாதிபதி ஹான், தானே பெரியவர் என்ற எண்ணம் யாருக்கும் வேண்டாம் என்றார்.
சீனத் தேசிய ஊடகம் அமெரிக்காவைக் குறிப்பிட்டு அப்படிச் சொல்வது வழக்கம்.