அமெரிக்காவில் புலம்பெயர்ந்தோரை வெளியேற்ற கோரி மெக்சிகோவில் மக்கள் போராட்டம்

அமெரிக்காவை சேர்ந்த புலம்பெயர்ந்தோரை தடுக்கக் கோரி மெக்சிகோவில் மக்கள் வீதிக்கு இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஸ்பானிஷ் மொழி பேசாத மக்களை வெளியேற்றவும், அமெரிக்காவைச் சேர்ந்த புலம்பெயர்ந்தோரை தடுக்கவும் வலியுறுத்தி மெக்சிகோ தலைநகரில் உள்ளூர் மக்கள் போராட்டம் நடத்தினர்.
அமெரிக்க குடியேற்றவாசிகளின் வருகையால் ஏற்படும் பிரச்சனைகளை முன்வைத்து அவர்கள் முழக்கம் எழுப்பினர்.
அமெரிக்க நகரங்களுடன் ஒப்பிடும்போது மெக்ஸிகோ நகரின் வாழ்க்கைச் செலவு குறைவாக இருப்பதால், வசதியான வெளிநாட்டவர்கள், குறிப்பாக அமெரிக்கர்கள், மெக்ஸிகோ சிட்டி நகரில் குவிந்து வருவதாக உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
(Visited 16 times, 1 visits today)