உலகில் முதன்முறையாக ஜப்பான் எடுக்கும் முயற்சி

உலகில் முதன்முறையாக ஆழ்கடலில் இருந்து அரிய கனிமங்களை எடுக்க ஜப்பான் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில், அமெரிக்கா, இந்தியா ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளுடன் அரிய கனிமங்களின் விநியோகம் தடையின்றித் தொடர ஜப்பான் உறுதியளித்தது.
மின் வாகனங்கள், காற்றாலைகள், ஏவுகணைகள் முதலியவற்றைத் தயாரிப்பதில் அரிய கனிமங்களுக்கு முக்கியப் பங்கு உண்டு. புத்தாக்கத் தொழில்நுட்பத்துக்குத் தேவையான அரிய கனிமங்களை வழங்குவதில் சீனாவின் செல்வாக்குப் பெருகுவதாக அக்கறை எழுந்துள்ளது.
எனவே, கடலிலிருந்து அரிய கனிமங்களைச் சலித்தெடுக்க ஜப்பான் முடிவெடுத்துள்ளது. மூன்று வாரத்தில் 35 டன் கடலடி மண்ணெடுக்க அது திட்டமிடுகிறது.
ஒரு டன் கடலடி மண்ணிலிருந்து 2 கிலோ அரிய கனிமங்கள் கிடைக்கலாம். அவை நவீன மின்னியல் சாதனங்களுக்கு இன்றியமையாதவையாகும்.
அதற்கமைய, உலகில் முதன்முறையாக 5,500 மீட்டர் ஆழத்திலிருந்து கடலடி மண்ணெடுக்கும் சோதனை நடத்தப்படுகிறது.