ஐரோப்பா

உச்சக்கட்ட பதற்றங்களுக்கு மத்தியில், நோர்வே சென்ற உலகின் மிகப் பெரிய போர் கப்பல்!

உலகின் மிகப்பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பலான USS Gerald R. Ford, இன்று (24) ஒஸ்லோவிற்கு சென்றுள்ளது.

உக்ரைன் போர் தொடர்பாக நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே பதற்றம் அதிகரித்துள்ள இந்த நேரத்தில் குறித்த கப்பலின் விஜயமானது மேலும் மோதலுக்கு வழிவகுக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

கப்பலும் அதன் பணியாளர்களும் எதிர்வரும் நாட்களில் நோர்வே ஆயுதப்படைகளுடன் இணைந்து பயிற்சிகளை மேற்கொள்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

“இந்தப் பயணம் அமெரிக்காவிற்கும் நார்வேக்கும் இடையிலான நெருங்கிய இருதரப்பு உறவின் முக்கிய சமிக்ஞையாகும்.   மேலும் கூட்டுப் பாதுகாப்பு மற்றும் தடுப்பின் நம்பகத்தன்மையின் சமிக்ஞையாகும்” என்று   நோர்வே கூட்டுத் தலைமையகத்தின் செய்தித் தொடர்பாளர் ஜானி கார்ல்சன் கூறினார்.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்