UFC போட்டியை நடத்த உள்ள வெள்ளை மாளிகை

அமெரிக்க சுதந்திரத்தின் 250 ஆண்டுகளைக் குறிக்கும் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, அடுத்த ஆண்டு, வெள்ளை மாளிகை UFC போட்டியை நடத்தும் என்று அயோவாவில் நடந்த பேரணியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்தார்.
“‘அமெரிக்கா250’ ஐ கௌரவிக்கும் வகையில் சிறப்பு நிகழ்வுகளை நடத்தப் போகின்றன, மேலும் நாங்கள் ஒரு UFC சண்டையை நடத்தப் போகிறோம் ” என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
“இது ஒரு சாம்பியன்ஷிப் சண்டையாக இருக்கும், 20,000 முதல் 25,000 பேர் வரை பார்க்கக்கூடிய முழு சண்டையாக இருக்கும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
UFC தலைவர் டானா வைட்டின் நண்பரான டிரம்ப், “நாங்கள் சில நம்பமுடியாத நிகழ்வுகள், சில தொழில்முறை நிகழ்வுகளை நடத்தப் போகிறோம்” என்று தெரிவித்தார்.
வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட், டிரம்ப் UFC சண்டைத் திட்டங்கள் குறித்து “மிகவும் தீவிரமாக” இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.