இலங்கையில் லஞ்சம் வாங்கிய குற்றச்சாட்டில் காதி நீதவான் ஒருவர் கைது
 
																																		விவாகரத்து வழக்கை பெண்ணுக்கு சாதகமாக முடிவெடுக்க ஒரு லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டபோது, கதுருவெல காதி நீதவான் மற்றும் ஒரு லிகிதர் ஆகியோர் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில், கதுருவெல காதி நீதிபதி வளாகத்தில் வைத்து, இரண்டு சந்தேக நபர்களையும் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு அதிகாரிகள் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கதுருவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துரைகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
(Visited 7 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
