இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

ஐரோப்பாவை உலுக்கிய வெப்பம் – ஸ்பெயினில் நால்வர் பலி

ஐரோப்பாவை உலுக்கிய வெப்பம் இதுவரை காணாத அளவை எட்டியுள்ளதுடன் மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதித்துள்ளது.

பல நாடுகளில் உச்ச விழிப்பு நிலை விடுக்கப்பட்டுள்ளதுடன் ஸ்பெயினில் குறைந்தது நால்வர் உயிரிழந்துள்ளனர்.

அங்கு ஜூன் மாதம் வரலாற்றில் மிக வெப்பமான மாதமாகப் பதிவானது.

கேட்டலோனியா பகுதியில் மூண்ட காட்டுத்தீ பெரும்பாலும் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.

பிரான்ஸின் பல வட்டாரங்களிலும் கடும்வெப்பம். கவனமாய் இருக்கும்படி மக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பல நகரங்களில் வெப்பம் 40 டிகிரி செல்சியஸைத் தாண்டியதால் மின்சாரக் கட்டமைப்பு பாதிக்கப்பட்டது.

வெப்பத்தால் 300 பேர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக பிரான்சின் எரிசக்தி அமைச்சர் கூறினார்.

ஜெர்மனியில் நேர்மாறாக ஆலங்கட்டி மழை பொழிகிறது. அதற்குப் பருவநிலை மாற்றமே காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!