செய்தி தமிழ்நாடு

திருமண மேடைக்கு அழைத்து வரப்பட்ட ஜல்லிக்கட்டு காளை

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றத்தில் உள்ள அய்யங்கோட்டை பகுதியை சேர்ந்த சுகப்பிரியா என்பவருக்கும், நாகமலைபுதுக்கோட்டை பகுதியை சேர்ந்த ராஜபாண்டி என்ற வாலிபருக்கும் நேற்று நாகமலைப்புதுக்கோட்டையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் திருமணம் கோலாகலமாக நடைபெற்றது.

இந்த திருமணத்தில் மணப்பெண்ணான சுகப்பிரியா, தனது வீட்டில் வளர்த்து வந்த ஜல்லிக்கட்டு காளையையும் புகுந்த வீட்டிற்கு தன்னுடன் அழைத்து சென்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக மணமேடையிலேயே ஜல்லிக்கட்டு காளையை ஏற்றி, காளைக்கு முத்தமிட்டு மணமகன் ராஜபாண்டிக்கு அறிமுகம் செய்ததோடு, காளையுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார்.

தனது உறவினர்களுக்கும் ஜல்லிகட்டு காளையை அறிமுகம் செய்து வைத்தனர் மணமக்கள். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

NR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!