வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு 06 மாத சிறை தண்டனை!

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஆறு மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக கூறப்படுகிறது.
வங்கதேசத்தில் நடந்த போராட்டங்களுக்கு மத்தியில், ஆகஸ்ட் 5, 2024 அன்று அவர் தனது பதவியை ராஜினாமா செய்து, டாக்காவில் உள்ள தனது வீட்டை கைவிட்டு, நாட்டை விட்டு இந்தியாவில் உள்ள ஒரு ரகசிய இடத்திற்கு தப்பிச் சென்றார்.
அதன் பிறகு ஒரு வழக்கில் அவருக்கு தண்டனை விதிக்கப்படுவது இதுவே முதல் முறை.
ஹசீனா மீது 136 கொலை வழக்குகள், 8 கொலை முயற்சி வழக்குகள், 3 கடத்தல் வழக்குகள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான 7 குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை வழக்குகள் உட்பட 155 வழக்குகள் சுமத்தப்பட்டுள்ளன.
(Visited 1 times, 1 visits today)