SLvsBAN – அபார பந்து வீச்சால் முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றி

வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறது.
இவ்விரு அணிகள் முதலாவது ஒருநாள் போட்டி இன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட்டிங் செய்வதாக அறித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 49.2 ஓவர்கள் முடிவில் 244 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக சரித் அசலங்கா அசத்தினார். வங்கதேசம் தரப்பில் தஸ்கின் அகமது 4 விக்கெட் வீழ்த்தினார்.
இதனையடுத்து வங்கதேச அணியின் தொடக்க வீரர்களாக பர்வேஸ் ஹொசைன் எமோன்- டான்சித் ஹசன் களமிறங்கினர். இதில் பர்வேஸ் ஹொசைன் எமோன் 13 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த நஜ்முல் ஹொசைன் சாண்டோ 23, லிட்டன் தாஸ் 0, டோஹித் ஹிரிடோய் 1, ஹசன் மிராஸ் 0 என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிக்கொடுத்தனர்.
இதனையடுத்து வந்த வீரர்கள் ஒற்றை இலக்க ரன்னில் வெளியேறினர். ஜாகர் அலி மட்டும் தனி ஆளாக போராடினார். அவர் 51 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் வங்கதேச அணி 167 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இலங்கை அணி தரப்பில் ஹசரங்கா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.