சீனாவில் 5276 மீட்டர் உயரமுள்ள மலையில் இருந்து தவறி விழுந்த இளைஞன்!

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் உள்ள 5,276 மீட்டர் உயரமுள்ள மவுண்ட் சிகுனியாங்கில் இருந்து இறங்கும்போது ஹாங்காங்கைச் சேர்ந்த 16 வயது சிறுவன் ஒருவர் கீழே விழுந்து உயிரிழந்ததாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உள்ளூர் பயண நிறுவனம் ஏற்பாடு செய்த வெளிப்புற நடவடிக்கையின் போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவ இடத்திற்கு மீட்பு குழுவினர் விரைவாக அனுப்பப்பட்டனர். இருப்பினும் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்த இளைஞர் பற்றிய கூடுதல் விவரங்கள் வெளியிடப்படவில்லை.
(Visited 2 times, 1 visits today)