ஐரோப்பிய நாடுகளில் நிலவிவரும் கடுமையான வெப்பநிலை – தொழிலாளர்கள் பலி!

ஐரோப்பிய நாடுகளில் நிலவிவரும் கடுமையான வெப்பநிலை காரணமாக இத்தாலி வெளிபுற வேலைகளை தடை செய்துள்ளது.
அதேபோல் பிரான்ஸ் பாடசாலைகளை மூடியுள்ளதுடன், கடுமையான சுகாதார எச்சரிக்கைகளையும் விடுத்துள்ளது.
ஸ்பெயினின் போலோக்னா அருகே ஒரு கட்டுமானத் தொழிலாளியின் மரணத்திற்கு ஸ்பானிஷ் தொழிற்சங்கங்கள் வெப்பத்தை காரணமாகக் கூறியதால், கடுமையான வெப்பநிலையில் வெளியே வேலை செய்வதன் அபாயங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன.
பார்சிலோனாவில், வார இறுதியில் தெரு துப்புரவுத் தொழிலாளியின் மரணமும் வெப்பத்துடன் தொடர்புடையதா என்று அதிகாரிகள் ஆராய்ந்து வந்தனர்.
இதற்கிடையில் ஐரோப்பா உலகின் மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாகும், இது உலகளாவிய சராசரியை விட இரண்டு மடங்கு வெப்பமடைகிறது என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் கோப்பர்நிக்கஸ் காலநிலை மாற்ற சேவை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.