கோடீஸ்வரர் எலோன் மஸ்க் நாடு கடத்தப்படுவாரா? – டிரம்ப் வெளியிட்ட பதிலால் அதிர்ச்சி

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்புக்கும், கோடீஸ்வர தொழிலதிபர் எலோன் மஸ்க்குக்கும் இடையிலான மோதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது.
எதிர்காலத்தில் எலோன் மஸ்க்கை நாடு கடத்த டிரம்ப் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இருப்பினும், இந்த வதந்தி குறித்து டிரம்ப் பகிரங்கமாக கருத்து தெரிவித்துள்ளார்.
வரி குறைப்பு மற்றும் வேலைகள் சட்டம் சட்டமாக மாறினால், எலோன் மஸ்க் மின்சார வாகன மானியங்களை விட அதிகமாக இழக்க நேரிடும் என்று டிரம்ப் கூறியுள்ளார்.
டெஸ்லா உரிமையாளரும் கோடீஸ்வரருமான எலோன் மஸ்க்கை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்துவது குறித்த கேள்விக்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் நேற்று பதிலளித்தார்,
அதற்கு அது குறித்துச் சிந்திக்கவேண்டும் என்று அவர் பதிலளித்தார்.
மஸ்க்கின் SpaceX, Starlink நிறுவனங்கள் அமெரிக்க அரசாங்கத்திடமிருந்து பெறும் நிதியுதவியும் மறுபரிசீலனை செய்யப்படலாம் என்று டிரம்ப் கோடிகாட்டியுள்ளார்.
டிரம்ப்பின் கருத்துகளைப் பெரிதுபடுத்த எண்ணம் தோன்றினாலும் அவ்வாறு செய்யப்போவதில்லை என்று மஸ்க் கூறினார்.