இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

உலக அணுச்சக்தி அதிகாரிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதமில்லை – ஈரான் அறிவிப்பு

சர்வதேச அணுச்சக்தி அமைப்பு அதிகாரிகளின் பாதுகாப்பிற்கு உத்தரவாதம் வழங்க முடியாது என ஈரான் அறிவித்துள்ளத.

ஒத்துழைப்பைத் தற்காலிகமாக இரத்துச் செய்வதாகவும் ஈரான் குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்காவும் இஸ்ரேலும் தாக்குதல் நடத்திய பிறகு வழக்கமான ஒத்துழைப்பை ஈரானிடமிருந்து எதிர்பார்க்க முடியாது என்று வெளியுறவு அமைச்சுப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அணுச்சக்தி அமைப்பு இம்மாதம் 12ஆம் திகதி ஈரான் விதிமுறைகளைப் பின்பற்றவில்லை என்று தீர்மானம் நிறைவேற்றியது.

அதையே காரணமாக வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதாக ஈரான் சாடியது. இஸ்ரேல், அமெரிக்கத் தாக்குதல்களை அமைப்பின் தலைவர் ரஃபயேல் கிரோசி கண்டிக்கவில்லை என்றும் தெஹ்ரான் குறைகூறியது.

தாக்கப்பட்ட தளங்களுக்கு அணுச்சக்தி அதிகாரிகள் சென்று சோதனையிட வேண்டும் என ரஃபயேல் வலியுறுத்திவருகிறார்.

(Visited 15 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி