ஜெர்மனியில் குழந்தைகளுக்கு செலவிடும் தொகையில் வரி விலக்கு
ஜெர்மனியில் குழந்தைகளுக்கு செலவிடும் தொகையில் வரி விலக்கு அளிக்கப்படவுள்ளது.
ஜெர்மனியில் எதிர்வருகின்ற 7ஆம் மாதம் முதலாம் திகதி முதல் சமூக கொடுப்பனவு பணத்தில் மேலும் பாரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதாக எதிர்பார்க்கப்படுகின்றது.
அதாவது இந்த 7ஆம் மாதம் முதலாம் திகதியில் இருந்து நடைமுறைக்கு வருகின்ற புதிய திட்டத்தின் படி, குழந்தைகளுக்காக செலவிடப்படுகின்ற வரியில் இருந்து விதி விலக்கு அளிப்பதற்கான தொகையானது அதிகரிக்கப்படும் என்றும் தெரியவந்திருக்கின்றது.
இந்நிலையில் எவர் ஒருவர் மேலதிக பயிற்சியை மேற்கொள்ளும் பொழுது இவர் வேலை இல்லாதவர்களுக்காக வழங்கப்படுகின்ற பணத்தை எடுக்கின்ற காலங்கள் நீடிக்கப்படும் என்றும் தெரியவந்திருக்கின்றது.
இந்நிலையில் கர்ப்பினி பெண்களுக்கு வழங்கப்படும் பணமானது சமூக உதவி பணத்துடன் கணக்கில் எடுக்கப்பட மாட்டாது என்றும் தெரியவந்திருக்கின்றது.
மேலும் சமூக உதவி பணம் தொடர்பில் பல விதிமுறைகள் நடைமுறைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.