வரி அச்சம் – அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய விரையும் உலக நாடுகள்

உலக நாடுகள் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய விரைந்துகொண்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
அமெரிக்காவின் வர்த்தக வரிகள் அடுத்த மாதம் 9ஆம் திகதி நடப்புக்கு வருவதற்கு முன்னர், இந்த ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளது.
வரிகளின் அளவை எவ்வளவுக்கு எவ்வளவு குறைக்கமுடியும் என்பதில் கவனம் செலுத்தப்படுகிறது.
அது முடியாவிட்டால், வரி தவிர்ப்பைத் தற்காலிகமாக நீட்டிக்க நாடுகள் விரும்புகின்றன. பிரித்தானியா மட்டுமே அமெரிக்காவுடன் வரிகள் தொடர்பாக ஒப்பந்தத்தை எட்டியுள்ளது.
எல்லா வரிகளையும் நீக்க வேண்டி ஜப்பானிய அதிகாரிகள் பல முறை அமெரிக்கா சென்றனர்.
இந்தியா, ஐரோப்பிய ஒன்றியம் போன்றவை 9ஆம் திகதிக்குள் ஒப்பந்தம் வந்துவிடும் என்று நம்புகின்றன.
(Visited 4 times, 4 visits today)