விளையாட்டு

ஸ்மிருதி மந்தனா படைத்த புதிய சாதனை

முதல் ‘டி-20’ போட்டியில் ஸ்மிருதி மந்தனா சதம் விளாச, இந்திய அணி 97 ரன்னில் வென்றது.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய பெண்கள் அணி ஐந்து ‘டி-20’ போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி நேற்று நாட்டிங்ஹாமில் நடந்தது. பயிற்சி போட்டியில் தலையில் காயமடைந்த ‘ரெகுலர்’ கேப்டன் ஹர்மன்பிரீத் கவுருக்கு, ஓய்வு தரப்பட்டது. கேப்டனாக ஸ்மிருதி மந்தனா பொறுப்பேற்றார். ‘டாஸ்’ வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் நாட் சிவர், பீல்டிங் தேர்வு செய்தார்.

ஸ்மிருதி அபாரம்

இந்திய அணிக்கு ஸ்மிருதி, ஷபாலி ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. லாரன் வீசிய முதல் ஓவரில் பவுண்டரி அடித்து ரன் கணக்கைத் துவக்கினார் ஸ்மிருதி. தொடர்ந்து ஆர்லாட் ஓவரில் 2 பவுண்டரி அடித்தார்.

மறுபக்கம் லாரன் ஓவரில் தன் பங்கிற்கு ஷபாலி, 2 பவுண்டரி அடித்தார். லின்சே வீசிய 4வது ஓவரில் ஸ்மிருதி, 3 பவுண்டரி அடிக்க, 14 ரன் கிடைத்தன. அடுத்த இரு ஓவரில் (5, 6) 9 ரன் மட்டும் எடுக்கப்பட்டன.

இந்திய அணி ‘பவர் பிளே’ ஓவர் (முதல் 6) முடிவில் 47/0 ரன் எடுத்தது. சோபி எக்லஸ்டன் வீசிய 7 வது ஓவரில் ஸ்மிருதி 2 சிக்சர், ஷபாலி 1 பவுண்டரி விளாச, 19 ரன் கிடைத்தன. முதல் விக்கெட்டுக்கு 8.2 ஓவரில் 77 ரன் சேர்த்த போது, ஆர்லாட் பந்தில் ஷபாலி (20) அவுட்டானார்.

அடுத்து வந்த ஹர்லீன், லின்சே ஓவரில் 3 பவுண்டரி அடித்து ரன் வேகத்தை அதிகரித்தார். ஸ்மிருதி ௫௧ பந்தில் சதம் கடந்தார். சர்வதேச ‘டி-20’ல் இவரது முதல் சதம் இது. ஹர்லீன் 43 ரன் எடுத்தார். ஸ்மிருதி 112 ரன்னில் அவுட்டானார். இந்திய அணி 20 ஓவரில் 210/5 ரன் எடுத்தது.

இங்கிலாந்து அணியை சோபியா (7), டேனி வயாத் (0) துவக்கத்தில் கைவிட்டனர். டாமி (10), ஆர்லாட் (12) ஏமாற்ற, நாட் சிவர் 66 ரன் எடுத்து ஆறுதல் தந்தார். இங்கிலாந்து அணி 14.5 ஓவரில் 113 ரன்னில் சுருண்டு, தோற்றது.

முதல் இந்திய வீராங்கனை

மூன்று வித கிரிக்கெட்டிலும் சதம் அடித்த முதல் இந்திய வீராங்கனை என சாதனை படைத்தார் ஸ்மிருதி. சர்வதேச அளவில் 5வது வீராங்கனை ஆனார்.

*சர்வதேச ‘டி-20’ ல் அதிக ரன் எடுத்த இந்திய வீராங்கனை ஆனார் ஸ்மிருதி (112). முன்னதாக ஹர்மன்பிரீத் கவுர் 103 ரன் (எதிர்-நியூசி., 2018) எடுத்திருந்தார்.

* சர்வதேச ‘டி-20’ ல் தனது அதிகபட்ச ரன்னை பதிவு செய்தார் ஸ்மிருதி (112). இதற்கு முன் 87 ரன் (எதிர்-அயர்லாந்து) எடுத்திருந்தார்.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ