இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா

ஆயுதங்களை அதிகரிக்கும் மேற்கத்திய நாடுகள் – புட்டின் எடுத்த திடீர் தீர்மானம்

ரஷ்ய இராணுவத்திற்கு நிதி ஒதுக்கீடு குறைப்படும் என ரஷ்ய ஜனாதிபதி புட்டின் தெரிவித்துள்ளார்.

மேற்கத்திய நாடுகள், குறிப்பாக நேட்டோ உறுப்பினர்கள், தங்கள் செலவினங்களை கடுமையாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கும் அதே வேளையில், ரஷ்யா தனது பாதுகாப்பு செலவினங்களைக் குறைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பெலாரஸ் தலைநகர் மின்ஸ்க் நகரில் பேசிய அவர், ராணுவத்திற்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ததால் இதர வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்பட்டதாக கூறினார்.

மேற்கத்திய நாடுகள் தங்கள் செலவினங்களை அதிகரிக்கும் அதே வேளையில், நாங்கள் பாதுகாப்பு செலவினங்களைக் குறைக்க திட்டமிட்டுள்ளோம். அவர்களை விடுங்கள், அது அவர்களைப் பாதுகாப்பாக மாற்றாது, மேலும் அது அவர்களை சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் பாதிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ரஷ்யாவில் ராணுவத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் நிதி அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு படிப்படியாக குறைக்கப்படும் என்று புட்டின் கூறினார்.

(Visited 12 times, 1 visits today)

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்