கனடாவில் 4 பில்லியன் ஆண்டுகள் பழைமையான பாறைகள் கண்டுபிடிப்பு
கனடாவில் 4 பில்லியன் ஆண்டுகள் பழைமையான பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட பாறைகளில் இது மிகப் பழைமையானவை என்று ஆய்வாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
கியூபெக் மாநிலத்தில் எரிமலைக்கு அருகிலுள்ள பாறைகள் பச்சை, இளஞ்சிவப்பு, கறுப்பு நிறங்களின் கலவையில் தோன்றுகின்றன.
இரண்டு விதமான சோதனைகள் நடத்தப்பட்டதில் அந்தப் பாறைகள் 4.16 பில்லியன் ஆண்டுகளுக்கு முன் தோன்றியதாகத் தெரியவந்தது.
பூமியின் ஆகத் தொன்மையான மண் படிமம் பாறைகளில் இருப்பதாக Science சஞ்சிகையில் வெளியான ஆய்வு முடிவுகள் கூறின.
அக்காலக்கட்டத்தில் பூமி எப்படி இருந்தது என்பதற்குப் பாறைகள் தடயம் கொடுக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.





