October 28, 2025
Breaking News
Follow Us
இந்தியா விளையாட்டு

குஜராத்தை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று முதலாவது தகுதிச்சுற்று ஆட்டம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது.

இதில் சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, சென்னை அணி முதலில் பேட்டிங் செய்தது.

துவக்க வீரர் ருதுராஜ் கெய்க்வாட் அதிரடியாக ஆடி ரன் குவித்தார். 36 பந்துகளில் அரை சதம் கடந்த அவர் 60 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ஷிவம் துபே ஒரு ரன்னில் வெளியேறினார். ரகானே 17 ரன்களில் அவுட் ஆனார்.

மறுமுனையில் சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த தேவன் கான்வே, 40 ரன்களில் விக்கெட்டை இழந்தார். அப்போது அணியின் ஸ்கோர் 125 ஆக இருந்தது.

ரகானே, அம்பதி ராயுடு தலா 17 ரன்கள் மட்டுமே சேர்த்தனர். 19வது ஓவரில் ஜடேஜாவுடன் இணைந்த கேப்டன் டோனி 2 ரன்னில் ஆட்டமிழந்தார்.

அவரது அதிரடி பேட்டிங்கை காண காத்திருந்த ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அதன்பின் ஜடேஜா 22 ரன்கள், மொயீன் அலி 9 ரன்கள் (நாட் அவுட்) சேர்க்க, சென்னை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் சேர்த்தது.

குஜராத் அணி தரப்பில் மோகித் சர்மா, ஷமி தலா 2 விக்கெட்டுகள் கைப்பற்றினர். தர்ஷன், ரஷித் கான், நூர் அகமது தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

இதையடுத்து 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் டைட்டன்ஸ் அணி களமிறங்கியது.

இதில், சுப்மன் கில் அதிகபட்மாக 42 ரன்களை எடுத்தார். தொடர்ந்து, ஷனக்கா 17 ரன்களும், சாஹா 12 ரன்களும், விஜய் சங்கர் 14 ரன்களும், ஹர்திக் பாண்டியா 8 ரன்களும், டேவிட் மில்லர் 4 ரன்களும், ராகுல் திவாடியா 3 ரன்களும் எடுத்தனர்.

19வது ஓவரில் 9 விக்கெட்டுகளுடன் குஜராத் அணி 146 ரன்களை எடுத்திருந்தது. இன்னும் 6 பந்துகளில் 27 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணி விளையாடியது.

அப்போது, கடைசி பந்தில் ராஷித் கான் 30 ரன்களுடன் ஆட்டமிழந்தார். நூர் அகமது 7 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இந்நிலையில், ஆட்டத்தின் முடிவில் 20 ஓவரில் அனைத்து விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்து குஜராத் அணி தோல்வியடைந்தது. 15 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி வெற்றிப்பெற்றது.

இதன் மூலம், முதன்முறையாக குஜராத் அணியை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிச்சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

(Visited 14 times, 1 visits today)

KP

About Author

You may also like

இந்தியா செய்தி

இலங்கையில் உணவின்றி தவிக்கும் குடும்பங்கள்

இலங்கையின் மொத்த சனத்தொகையில் 59 வீதமான குடும்பங்கள் தேவையான உணவைப் பூர்த்தி செய்ய இயலவில்லை என தெரியவந்துள்ளது. அண்மையில் டுபாயில் நடைபெற்ற சர்வதேச கருத்தரங்கு ஒன்றில் இந்த
இந்தியா செய்தி

இலங்கையில் விமான டிக்கெட்டுக்கின் விலை குறைப்பு!

இலங்கையில் விமான டிக்கெட்டுக்களுக்கான விலை குறைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஐந்து சதவீதத்தினால் விமான டிக்கெட்டுக்களின் விலையை குறைக்க தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. டொலருக்கு நிகராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பே