இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவுவதற்கான வழிமுறைகள் குறித்து இந்திய பிரதம நிறைவேற்று அதிகாரிகள் பேரவை
அமெரிக்கத்தூதுவருக்கும் இந்திய பிரதம நிறைவேற்று அதிகாரிகள் பேரவையின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பின்போது இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு உதவுவதற்கான வழிமுறைகள் குறித்து ஆராயப்பட்டுள்ளது.
இந்திய பிரதம நிறைவேற்று அதிகாரிகள் (சி.ஈ.ஓ) பேரவையின் பிரதிநிதிகளுக்கும் இலங்கைக்கான அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங்குக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று முன்தினம் புதன்கிழமை கொழும்பில் நடைபெற்றது.
இச்சந்திப்பின்போது தற்போது நிலவும் சவால்கள் குறித்தும், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கு அனைத்துத்தரப்பினரும் கூட்டிணைந்து உதவக்கூடிய புதிய வழிமுறைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக அமெரிக்கத்தூதுவர் ஜுலி சங் தெரிவித்துள்ளார்.
(Visited 11 times, 1 visits today)





