செய்தி

கண் சொட்டு மருந்து பயன்படுத்தி 14 பேர் பார்வையிழப்பு, 4 பேர் உயிரிழப்பு!

அமெரிக்காவில் கண்களில் சொட்டு மருந்து போட்டுக்கொண்ட 4 பேர் உயிரிழந்துள்ளார்கள். மேலும், 14 பேர் பார்வையிழந்துள்ளதுடன், 4 பேருடைய கண்கள் அகற்றப்பட்டுள்ளன.

அமெரிக்காவில், கண்களில் ஒரு குறிப்பிட்ட சொட்டு மருந்தைப் போட்டுக்கொண்ட 81 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்கள்.Artificial Tears என்னும் கண் மருந்தின் 10 பிராண்ட்கள், குறிப்பாகச் சொன்னால், EzriCare Artificial Tears என்னும் கண் மருந்துதான் அதிக அளவில் பிரச்சினையை உருவாக்கியுள்ளது.இந்த மருந்தைப் பயன்படுத்திய 4 பேர் உயிரிழந்துள்ளார்கள். 14 பேர் பார்வையிழந்துள்ளதுடன், 4 பேருடைய கண்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளன என்னும் பதறவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.

கண் சொட்டு மருந்து பயன்படுத்திய 14 பேர் பார்வையிழப்பு, 4 பேர் உயிரிழப்பு: பதறவைத்துள்ள ஒரு செய்தி | 14 People Use Eye Drops Lost Their Vision

இந்த பிரச்சினைக்கு காரணமாக அமைந்துள்ளது சூடோமோனாஸ் என்னும் ஒரு கிருமியாகும்.ஆனால், இந்த கிருமியை மட்டும் முழுமையாக குறை சொல்லிவிடமுடியாது. ஏனென்றால், இந்தக் கிருமி மண்ணிலும் தண்ணீரிலும், ஏன் நமது குளியலறையில் கூட காணப்படும் ஒரு சாதாரண கிருமியாகும். ஆனால், குளியலறையில் இருக்கும் இந்த சாதாரண கிருமி நம் உடலுக்குள் நுழைந்துவிட்டால் பிரச்சினைகளை உருவாக்கிவிடுகிறது.அதைவிட முக்கியமான விடயம் என்னவென்றால், இந்த பிரச்சினைக்கு மனிதர்களாகிய நாமும்தான் காரணம்.

கண் சொட்டு மருந்து பயன்படுத்திய 14 பேர் பார்வையிழப்பு, 4 பேர் உயிரிழப்பு: பதறவைத்துள்ள ஒரு செய்தி | 14 People Use Eye Drops Lost Their Vision

அதாவது, எந்த சின்ன பிரச்சினை ஏற்பட்டாலும் உடனே அருகிலுள்ள மருது கடைக்கு ஓடி ஒரு ஆன்டிபயாடிக் மாத்திரையை வாங்கி போட்டுக்கொள்வது. அப்படி கண்ட கண்ட ஆன்டிபயாடிக்குகளை உட்கொள்வதால் என்ன ஆகும் என்றால், சாதாரணமாக இருக்கும் கிருமிகள் கூட, அந்த ஆன்டிபயாடிக்குகளை எதிர்க்கும் கிருமிகளாக காலப்போக்கில் ஆகிவிடும். அப்புறம் அந்தக் கிருமியை நீங்கள் எந்த ஆன்டிபயாடிக்காலும் கொல்ல முடியாது.

இப்படிப்பட்ட கிருமிகளை ஆன்டிபயாடிக்குகளுக்கு அடங்காத கிருமிகள் என்கிறோம். ஆக, ஆன்டிபயாடிக்குகளுக்கு அடங்காத கிருமிகளை எந்த ஆன்டிபயாடிக்குகளைக் கொண்டு கொல்வது தற்போது உலக நாடுகள் பலவற்றில், இப்படி ஆன்டிபயாடிக்குகளுக்கு அடங்காத கிருமிகள் பரவி பல உயிர்களை பலிவாங்கி வருகின்றன.அவ்வகையான பாதிப்புகளில் ஒன்றுதான் இப்போது அமெரிக்காவில் பரவிவரும் இந்த கண் பிரச்சினை என்பது குறிப்பிடத்தக்கது.

(Visited 13 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி