செய்தி விளையாட்டு

SLvsBAN – 4ம் நாள் முடிவில் 183 ஓட்டங்கள் முன்னிலையில் வங்கதேசம்

இலங்கை-வங்காளதேசம் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது போட்டி காலேயில் கடந்த 17ம் தேதி தொடங்கியது. இதில் டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

அதன்படி பேட்டிங் செய்த வங்கதேசம் முதல் இன்னிங்சில் 153.4 ஓவர்களில் 484 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.

இதனையடுத்து தனது முதல் இன்னிங்சை விளையாடிய இலங்கை 3ம் நாள் முடிவில் இலங்கை அணி 4 விக்கெட்டுகளை இழந்து 368 ரன்கள் எடுத்திருந்தது.

இந்த சூழலில் 4வது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. தொடர்ந்து பேட்டிங் செய்த இலங்கை அணி முதல் இன்னிங்சில் 485 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது.

பின்னர் 10 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் 4வது நாள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 177 ரன்கள் அடித்துள்ளது.

வங்காளதேச அணி இதுவரை 187 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. நாளை கடைசி நாள் ஆட்டம் நடைபெறவுள்ளது.

(Visited 5 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி