ஏர் இந்தியா விபத்து – மரபணுச் சோதனை மூலம் அடையாளம் காணப்பட்ட 200 போர்

ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த 200க்கும் அதிகமானோர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மரபணுச் சோதனை மூலம் அவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டதாக இந்திய அதிகாரிகள் கூறினர்.
கடந்த வியாழக்கிழமை இந்தியாவின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது.
அதில் 242 பயணிகள் இருந்தனர். ஒருவர் மட்டுமே உயிர்பிழைத்தார். விமானம் குடியிருப்புப் பகுதியில் விழுந்ததில் அங்கு இருந்த சுமார் 38 பேர் உயிரிழந்துள்ளனர்.
அந்த விமானம் லண்டன் செல்லவிருந்தது. விபத்துக்கான காரணம் இன்னும் தெரியவில்லை.
விமானத்தின் தகவல், குரல் பதிவுப் பெட்டிகள் மீட்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து தகவல்களைப் பெறும் முயற்சியில் அதிகாரிகள் இறங்கியுள்ளனர்.
(Visited 22 times, 1 visits today)