சீனாவில் பட்டாசு தொழிற்சாலையில் தீவிபத்து – 09 பேர் பலி!

மத்திய சீனாவில் உள்ள ஒரு பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 26 பேர் காயமடைந்ததாக மாநில ஊடகங்கள் தெரிவித்தன.
ஷான்சோ பட்டாசு நிறுவன தொழிற்சாலை ஹுனான் மாகாணத்தில் உள்ள சாங்டே நகருக்கு வடக்கே உள்ள லின்லி கவுண்டியின் மலைப்பகுதியில் உள்ளது.
குறித்த தொழிற்சாலையிலேயே விபத்து நிகழ்ந்துள்ளது. மேலும் வெடிப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவசரகால மேலாண்மை அமைச்சகம் சம்பவ இடத்திற்கு ஒரு பணிக்குழுவை அனுப்பியது. வெடிப்புக்கான காரணத்தை அறிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
(Visited 11 times, 1 visits today)