ஏர் இந்தியா விமான விபத்தைப் பயன்படுத்திச் சுயவிளம்பரம் தேட வேண்டாம் என கோரிக்கை

ஏர் இந்தியா விமான விபத்தைப் பயன்படுத்திச் சுயவிளம்பரம் தேட வேண்டாம் என பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
விபத்தில் 3 பிள்ளைகளுடன் பலியான பிரத்தீக் ஜோஷி – கோமி வியாஸ் தம்பதியின் உறவினர் குல்டீப் என்பவர் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
குடும்பத்தின் படத்தை AI செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் கொண்டு மாற்றியமைத்தும் போலியான காணொளிகளைப் பகிர்ந்தும் சிலர் சுயவிளம்பரம் தேட முயல்வது மிகவும் வருத்தமளிப்பதாக குல்டீப் கூறினார்.
சமூக ஊடகத்தில் தங்களுக்கு likes உயர வேண்டும், followers எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும் என்பதற்காகச் சிலர் இத்தகைய செயல்களைச் செய்கின்றனர் என அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
உயிரிழந்த கோமியின் பெயரில் போலி சமூக ஊடகக் கணக்குகள் திறக்கப்பட்டுள்ளதும் வருத்தமளிக்கிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இப்படிச் செய்வதால் தங்களுக்கு மனஉளைச்சல் இன்னும் கூடுவதாக குல்டீப் குறிப்ிபட்டுள்ளார்.
இத்தகைய செயல்களை நிறுத்திக்கொள்ளுமாறு அவர் கேட்டுக்கொண்டார்.