செய்தி மத்திய கிழக்கு

தாக்குதல் தீவிரம் – ஈரானிலுள்ள இந்திய மாணவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

தொடர் தாக்குதல்களையடுத்து ஈரானிலுள்ள இந்தியாவைச் சேர்ந்த மாணவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டு வருகின்றனர்.

அரசதந்திரிகள் மாணவர்களுக்கு உதவி வருவதாக இந்தியா தெரிவித்தது. இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போர் வட்டாரப் போராக மாறக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில்கொண்டு அந்நடவடிக்கை எடுக்கப்படுவதாக புதுடில்லி தெரிவித்துள்ளது.

தெஹ்ரானிலுள்ள இந்தியத் தூதரகம் தொடர்ந்து நிலவரத்தை அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது. மாணவர்களுடன் தொடர்பிலிருந்து வருவதாக இந்திய வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கை கூறியது.

மாணவர்களில் சிலர் ஈரானுக்குள் இந்தியத் தூதரகத்தின் கட்டடங்களுக்கு இடம் மாற்றப்பட்டுள்ளனர்.
விளம்பரம்

கடந்த ஆண்டு வரைக்குமான தகவலின்படி ஈரானில் சுமார் 10,000 இந்திய நாட்டவர் இருக்கின்றனர்.

2022ஆம் ஆண்டிலிருந்து பார்க்கும்போது 2,000க்கும் அதிகமான இந்திய மாணவர்கள் ஈரானில் இருக்கின்றனர்.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி