ஈரானின் உயர்மட்ட தலைவரை கொல்ல வேண்டாம் என டிரம்ப் கூறியதாகத் தகவல்

ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனியைக் கொல்லும் இஸ்ரேலின் திட்டத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது.
அந்தத் தகவலை 3 அமெரிக்க அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இஸ்ரேலியப் பிரதமரிடம் அது நல்ல திட்டம் இல்லை என டிரம்ப் கூறியதாக சொல்லப்பட்டது.
அது குறித்து டிரம்ப் வெளிப்படையாகக் கருத்துகள் எதுவும் தெரிவிக்கவில்லை.
இரு தலைவர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் சென்ற வெள்ளிக்கிழமை இஸ்ரேல் ஈரான் மீது தாக்குதல் நடத்திய பிறகு நடந்ததாக கூறப்படுகின்றது.
எனினும் இது குறித்து தகவல் வெளியிட்ட இஸ்ரேலிய பிரதமர், நடக்காத கலந்துரையாடல்கள் குறித்துப் பல பொய்த் தகவல்கள் வெளிவருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இஸ்ரேல் அதற்கு எது நல்லதோ அதைச் செய்யும். அமெரிக்காவுக்கு எது நல்லது என்று அமெரிக்காவுக்குத் தெரியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.