இந்தியா செய்தி

ஏர் இந்தியா விபத்து – உயிரிழந்தவர்களை அடையாளம் காண மரபணு மாதிரிகள் சோதனை

இந்தியாவில் ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களை அடையாளம் காண நூற்றுக்கணக்கான உறவினர்கள் மரபணு மாதிரிகளைக் கொடுத்துள்ளனர்.

விபத்தில் 270க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர். அவர்களில் சிலர் விமானம் விழும்போது தரையில் இருந்தவர்களாகும்.

பெரும்பாலான உடல்கள் கண்டுபிடிக்க முடியாத அளவுக்குச் சிதைந்துள்ளது.

உடல்களை அடையாளம் காணும் பணிகள் தாமதமடைவதால் அவற்றைப் பெற்றுக்கொள்ள காத்திருக்கும் குடும்பங்களும் உறவினர்களும் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

பொதுவில் மரபணு மாதிரி ஒருவருக்கு ஒத்துப்போகிறதா என்பதைக் கண்டுபிடிக்க 72 மணி நேரம் வரை ஆகும் என்று அதிகாரிகள் கூறினர். சோதனையைத் தீவிரப்படுத்துவதாக அவர்கள் தெரிவித்தனர்.

(Visited 8 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி