இலங்கையில் 180 அத்தியாவசிய மருந்துகளுக்கு பற்றாக்குறை

இலங்கையில் சுமார் 180 அத்தியாவசிய மருந்துகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய மருந்து சேமிப்பு மையங்களில், 180 அத்தியாவசிய மருந்துகள் இல்லை என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.
அதேநேரம், மருத்துவமனைகளுக்குள், சுமார் 50 வகையான அத்தியாவசிய மருந்துகள் பற்றாக்குறையாக உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வலி நிவாரணிகள், நுண்ணுயிர் எதிர்ப்பிகள், இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் சிறுநீரகம் தொடர்பான மருந்துகளும் பற்றாக்குறையாக உள்ளன.
புற்றுநோய் சிகிச்சை மருந்துகளின் பற்றாக்குறை அதிகரித்து வருவதாகவும் விஜேசிங்க சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தநிலையில் அரச மருத்துவ அதிகாரிகளின், இந்த குற்றச்சாட்டுக்களுக்கு, அரசாங்கம் விரைவில் பதிலளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 13 times, 1 visits today)