இஸ்ரேல் மீது பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல் நடத்திய ஈரான்

ஈரானிய அணுசக்தி மற்றும் இராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இஸ்ரேல் மீது நூற்றுக்கணக்கான பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஈரான் வீசியதாக ஈரானின் அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஈரானிய இராணுவம் அதன் நடவடிக்கையை “கடுமையான தண்டனை” என்று தெரிவித்துள்ளது.
ஈரானிய ஏவுகணை தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் முழுவதும் வான்வழித் தாக்குதல் சைரன்கள் ஒளிக்கப்பட்டுள்ளது.
உயிரிழப்புகள் குறித்து உடனடி தகவல்கள் எதுவும் இல்லை.
பல ஏவுகணைகள் ஏவப்பட்டதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் வசிப்பவர்களை வெடிகுண்டு முகாம்களுக்குள் செல்ல இஸ்ரேலிய இராணுவம் உத்தரவிட்டுள்ளது.
(Visited 11 times, 1 visits today)