செய்தி விளையாட்டு

WTC Final – 138 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்த தென் ஆப்பிரிக்கா

உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி நேற்று லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, ரபாடாவின் அபார பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 212 ரன்னில் சுருண்டது.

பின்னர் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சை தொடங்கியது. புதிய பந்தில் ஸ்டார்க் அபாரமாக பந்து வீச நேற்றைய முதல் நாள் ஆட்ட முடிவில் தென்அப்பிரிக்கா 43 ரன்கள் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

இன்று 2ஆவது நாள் ஆட்டம் தொடங்கியது. பவுமா 36 ரன்களிலும், பெடிங்காம் 45 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்த இருவரையும் பேட் கம்மின்ஸ் வீழ்த்தினார்.

அதன்பின் வந்தவர்கள் தொடர்ச்சியாக வெளியேற தென்ஆப்பிரிக்கா 138 ரன்னில் சுருண்டது. இதன்மூலம் தென்ஆப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 74 ரன்கள் பின்தங்கியுள்ளது.

பேட் கம்மின்ஸ் அபாரமாக பந்து வீசி 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார். ஸ்டார்க் 2 விக்கெட்டும், ஹேசில்வுட் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

(Visited 4 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி