லொஸ் ஏஞ்சல்ஸில் அதிகரிக்கும் பதற்றம் – ஊரடங்கு உத்தரவு அமுல்

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸில் சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் அரசின் நடவடிக்கைக்கு எதிரான போராட்டத்தையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாசவேலை மற்றும் கொள்ளையைத் தடுக்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக லொஸ் ஏஞ்சல்ஸ் மேயர் அறிவித்தார்.
அமெரிக்க நேரப்படி இரவு 8:00 மணி முதல் மறுநாள் காலை 6:00 மணி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்.
ஊரடங்கு உத்தரவை மீறும் எவரும் கைது செய்யப்படுவார்கள் என்று அவர் எச்சரித்தார்.
கடந்த திங்கட்கிழமை இரவு 23 வணிகங்கள் சூறையாடப்பட்டதை அடுத்து, லொஸ் ஏஞ்சல்ஸில் அவசரகால நிலையை அறிவிக்க மேயர் முடிவு செய்தார்.
செவ்வாய்க்கிழமை மட்டும், 197 பேர் இராணுவத்தால் கைது செய்யப்பட்டனர்.
(Visited 13 times, 1 visits today)