செய்தி

அமெரிக்​கா​வில் சட்ட​விரோத​மாக​ குடியேறிய 44 பேர் கைது – மக்கள் போராட்டத்தால் பரபரப்பு

அமெரிக்​கா​வில் சட்ட​விரோத​மாக​ குடியேறியவர்களை கண்டறிந்து நாடுகடத்தும் நடவடிக்கையை ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப் தீவிரப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில், அவரது உத்தரவுக்கு ஏற்ப முறையான ஆவணங்கள் இல்லாமல் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அத்துமீறி தங்கியிருந்த 44 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையை அடுத்து நகரில் பல்வேறு இடங்களில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இதில் அதிகளவிலான மக்கள் பங்கேற்றனர். அதை கலைக்க பொலிஸ் தரப்பில் முயற்சி நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

நகரில் சில இடங்களில் சோதனை மேற்கொண்டு சட்டவிரோத குடியேறிகளை கைது செய்துள்ளனர். அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு துறையின் விசாரணையில் 3 இடங்களில் மட்டுமே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இருப்பினும் சுமார் 7 இடங்களில் இந்த சோதனை நடந்ததாக புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவு அளிக்கும் குழுக்கள் தெரிவித்துள்ளன.

இந்த கைது நடவடிக்கையை அடுத்து நகரில் பல்வேறு இடங்களில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் அதிகளவிலான மக்கள் பங்கேற்றனர். அதை கலைக்க பொலிஸ் தரப்பில் முயற்சி நடந்தது.

‘கைது செய்தவர்களை விடுவிக்கவும். அவர்கள் இங்கேயே தங்கியிருக்க அனுமதிக்கவும்’ என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர்.

(Visited 10 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!