வட அமெரிக்கா

சீன ஜனாதிபதியுடன் பேசிய டிரம்ப் : மீண்டும் ஒரு வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படுமா?

அமெரிக்கா மற்றும் சீனா இடையே மீண்டும் ஒரு வர்த்தக ஒப்பந்தம் எட்டப்படுவது தொடர்பில் பேச்சு வார்த்தை நடத்த இரு நாடுகளும் முன்வந்துள்ளன.

இதன் ஒரு பகுதியாக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் சீன அதிபர் ஜீ ஜின்பிங் ஆகியோர் நேற்று முன்தினம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பேசினார்கள்.

இதுபற்றி குறிப்பிட்ட டிரம்ப், உரையாடல் மிக நேர்மறையாக நடந்து முடிந்தது என்றார்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது மந்திரிசபையின் பிரதிநிதிகள் வருகிற 9-ந்தேதி லண்டனில் சீன மந்திரிசபை பிரதிநிதிகளை சந்தித்து வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதிப்பார்கள் என்று தெரிவித்தார்.

இதுகுறித்து டிரம்ப் தனது சமூக வலைதள பதிவில் கூறி இருப்பதாவது, அமெரிக்க கருவூல செயலாளர் ஸ்காட் பெசென்ட், வர்த்தக செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் மற்றும் அமெரிக்க வர்த்தக பிரதிநிதி ஜேமிசன் கிரீர் ஆகியோர் வருகிற 9ஆம் திகதி லண்டனில் சீன பிரதிநிதிகளுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த கூட்டம் மிக சிறப்பாக நடக்க வேண்டும்” என தெரிவித்தார்.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!