வட அமெரிக்கா

லாஸ் ஏஞ்சல்ஸ் முழுவதும் குடிவரவு மீறல்களுக்காக 44 பேரை கைது செய்த அதிகாரிகள்

அமெரிக்​கா​வில் முறையான ஆவணங்கள் இல்லாமலும், சட்ட​விரோத​மாக​வும் குடியேறியவர்களை கண்டறிந்து நாடுகடத்தி வருகிறார் அந்நாட்டு அதிபர் டொனால்டு ட்ரம்ப். இந்நிலையில், அவரது உத்தரவுக்கு ஏற்ப முறையான ஆவணங்கள் இல்லாமல் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் அத்துமீறி தங்கியிருந்த 44 பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

இந்த கைது நடவடிக்கையை அடுத்து நகரில் பல்வேறு இடங்களில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் அதிகளவிலான மக்கள் பங்கேற்றனர். அதை கலைக்க போலீஸ் தரப்பில் முயற்சி நடந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரம் அமெரிக்காவில் அதிக மக்கள் வசிக்கும் நகரங்களில் ஒன்றாக உள்ளது. இந்நிலையில், இந்த நகரில் சில இடங்களில் சோதனை மேற்கொண்டு சட்டவிரோத குடியேறிகளை கைது செய்துள்ளனர். அந்த நாட்டின் தேசிய பாதுகாப்பு துறையின் விசாரணையில் 3 இடங்களில் மட்டுமே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. இருப்பினும் சுமார் 7 இடங்களில் இந்த சோதனை நடந்ததாக புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவு அளிக்கும் குழுக்கள் தெரிவித்துள்ளன.

இந்த கைது நடவடிக்கையை அடுத்து நகரில் பல்வேறு இடங்களில் புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக முற்றுகை போராட்டம் நடைபெற்றது. இதில் அதிகளவிலான மக்கள் பங்கேற்றனர். அதை கலைக்க போலீஸ் தரப்பில் முயற்சி நடந்தது. ‘கைது செய்தவர்களை விடுவிக்கவும். அவர்கள் இங்கேயே தங்கியிருக்க அனுமதிக்கவும்’ என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்துள்ளனர். புலம்பெயர்ந்தவர்கள் அதிகம் பணிபுரியும் வணிக நிறுவனங்களை டார்கெட் செய்து இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. போராட்டம் தொடர்பான வீடியோ காட்சிகளும் சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இது அங்கு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

(Visited 4 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

செய்தி வட அமெரிக்கா

கனடாவில் வீட்டில் இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை!

கனடாவில் ஆயுத உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். நோவா ஸ்கோட்டியாவின் மீகர்ஸ் கிரான்ட் என்னும் பகுதியின் வீடொன்றில் இந்த இரகசிய ஆயுத உற்பத்திச்சாலை
செய்தி வட அமெரிக்கா

அறுவைசிகிச்சை முடித்த பின் தெரிய வந்த உண்மை… கதறி அழுத தந்தை!

அமெரிக்காவைச் சேர்ந்த இளம்பெண் தன் தந்தைக்கே தெரியாமல், ரகசியமாக அவருக்குச் சிறுநீரக தானம் செய்துள்ள சம்பவத்தால், நெகிழ்ந்து போன தந்தையின் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. அமெரிக்காவின்
error: Content is protected !!