விராட் கோலிக்கு எதிராக முறைப்பாடு பதிவு
ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் வெற்றிப் பேரணியின் போது, சனநெரிசலில் சிக்கி 11 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்று நால்வர் கைது செய்யப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி வீரர் விராட் கோலிக்கு எதிராக வழக்கு பதிவு செய்யுமாறு கோரி கப்பான் பார்க் காவல்நிலையத்தில் முறைப்பாடளிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏ.எம்.வெங்கடேஷ் என்பவர் அளித்த முறைப்பாடு, ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வழக்கின் கீழ் விசாரணை நடத்தப்படும் என அந்நாட்டு காவல்துறை தெரிவித்துள்ளது.
(Visited 10 times, 1 visits today)





