செய்தி

ஜெர்மனியில் வேலை செய்யும் மணித்தியாலங்களில் ஏற்படவுள்ள மாற்றம்

ஜெர்மனியின் புதிய கூட்டணி அரசாங்கம், தற்போதைய அலுவலக விதிகளை மாற்றுவதற்கு தீர்மானித்துள்ளது.

தற்போது, ​​ஜெர்மனியில் உள்ள மக்கள், நாளொன்றுக்கு அதிகபட்சமாக எட்டு மணிநேரம் வேலை செய்யலாம்.

புதிய திட்டத்தின் படி, நாளொன்றுக்கான இந்த வரம்பு நீக்கப்பட உள்ளது.

இதன்படி, வாரத்தின் வேலை மணிநேரம் மாறாமல், வாரத்தின் ஒரு வேலைநாள் நீளமானதாகவோ குறுகியதாகவோ இருக்கலாம்.

இந்த மாற்றம் அதிக நெகிழ்வுத்தன்மையை கொண்டது என்பதால் சிலர் இதனை ஆதரிக்கின்றனர்.

46 வீதமான மக்கள் இந்த மாற்றத்தை விரும்புவதோடு 44 வீதமான மக்கள் இந்த மாற்றத்தை விரும்பவில்லை என சமீபத்திய ஆய்வு கூறுகின்றது.

மற்றொரு கணக்கெடுப்பு, ஒரு வருடம் முன்னதாக ஓய்வு பெற விரும்பும் 63 வீதமான மக்கள், ஒவ்வொரு வாரமும் ஒரு மணிநேரம் கூடுதலாக வேலை செய்வார்கள் என விவரிக்கின்றது.

எனினும், எட்டு மணி நேர வேலையை நீக்குவது நீண்ட மற்றும் அதிக மன அழுத்தமான வேலை நாட்களுக்கு வழிவகுக்கும் என சிலர் கூறுகின்றனர்.

இது வேலைக்கும் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் இடையிலான சமநிலையை பாதிக்கக்கூடும் என்று அவர்கள் அஞ்சுகின்றார்கள்.

அரசாங்கம் இந்த பெரிய மாற்றத்தை திட்டமிடும் அதேவேளை, நாடு முழுவதும் இது குறித்த விவாதங்கள் எழுகின்றன.

(Visited 14 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!