உலகம் செய்தி

ஜிம்பாப்வேயில் 50 யானைகளை கொன்று மாமிசத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்க நடவடிக்கை

ஜிம்பாப்வேயில் 50 யானைகளை கொன்று அவற்றின் மாமிசத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்க ஜிம்பாப்வே அரசு முடிவு செய்துள்ளது.

ஜிம்பாப்வேயில் யானைகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் இடையே கடும் மோதல் ஏற்படுகிறது.

இதனால் அங்கு வசிக்கும் மக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதனிடையே 800 யானைகள் வசிக்கக்கூடிய இடத்தில 2,550 யானைகள் வசிப்பதாக கூறப்படுகிறது.

ஜிம்பாப்வேயில் சமீப காலமாக யானைகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. ஆப்பிரிக்காவில் உள்ள சவன்னா யானைகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு போட்ஸ்வானாவில் வாழ்ந்து வருகின்றன. போட்ஸ்வானாவிற்குப் பின் உலகின் இரண்டாவது பெரிய யானை எண்ணிக்கையை ஜிம்பாப்வே கொண்டுள்ளது.

இதன் காரணமாக சுமார் 50 யானைகளை கொன்று அவற்றின் மாமிசத்தை மக்களுக்கு பகிர்ந்தளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் 800 யானைகள் வசிக்கக்கூடிய இடத்தில 2,550 யானைகள் வசிப்பதால் மனிதர்களுக்கும், மிருகங்களுக்கும் இடையே மோதல் ஏற்படுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு விளக்கம் கொடுத்துள்ளது. மேலும் யானைகளில் இருந்து வெட்டப்படும் தந்தங்களை அரசு பாதுகாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!