செய்தி

சீனாவின் மாநிலம் ஒன்றில் திருமணத்திற்கு 25 நாட்கள் – பிள்ளை பிறந்தால் 150 நாட்கள் விடுப்பு

சீனாவின் சீச்சுவான் மாநிலத்தில் திருமணம் செய்துகொண்டால் 25 நாட்களும் பிள்ளை பெற்றுக்கொண்டால் 150 நாட்களும் வரை விடுப்பு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

குழந்தை பிறப்பு விகிதத்தை உயர்த்த இந்த புதிய திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

சீச்சுவான் சுகாதார ஆணையம் புதிய பரிந்துரை குறித்து மக்களிடம் கருத்துத் திரட்டுகிறது.

தற்போது அங்கு திருமண விடுப்பு 5 நாட்களாகவும் மகப்பேற்று விடுப்பு 60 நாட்களாகவும் உள்ளது.

தந்தையர் விடுப்பையும் 20 நாட்களிலிருந்து 30 நாட்களாக அதிகரிக்க சீச்சுவான் திட்டமிடுகிறது.

குழந்தை வளர்க்கும் பொறுப்பை தம்பதிகள் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துவதே அதன் நோக்கமாகும். சீச்சுவான் மாநிலத்தில் 84 மில்லியன் பேர் வசிக்கின்றனர்.

சீனாவில் தொடர்ந்து 3ஆவது ஆண்டாகச் சென்ற ஆண்டு மக்கள்தொகை சரிந்தது. அது தொடர்ந்து மோசமாகக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

(Visited 16 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!