ஜப்பானில் குழந்தைப் பிறப்பு விகிதம் இதுவரை இல்லாத அளவு வீழ்ச்சி
																																		ஜப்பானில் குழந்தைப் பிறப்பு விகிதம் 9ஆவது ஆண்டாக இதுவரை இல்லாத அளவு குறைந்தது.
ஜப்பானின் மொத்தக் கருத்தரிப்பு விகிதம் கடந்த ஆண்டு 1.15க்குக் குறைந்தது. அதற்கு முந்திய ஆண்டு அது 1.2ஆக இருந்தது.
1947ஆம் ஆண்டுக்குப் பிறகு அது ஆகக்குறைவான விகிதமாகும். ஓராண்டுக்குப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை 700,000க்குக் கீழ் பதிவானது.
இளம்பெண்கள் குறைவாக இருப்பதும் தாமதமாகத் திருமணம் புரிவதும் மக்கள்தொகை குறைய முக்கியக் காரணங்கள் என்று ஜப்பானியச் சுகாதார அமைச்சு தெரிவித்தது.
பிறப்பு விகிதத்தை உயர்த்த அரசாங்கம் அண்மைக்காலமாக அதிக முயற்சிகளை மேற்கொள்கிறது.
அது அவ்வளவு பலனைத் தரவில்லை. ஜப்பானியப் பிரதமர் ஷிகெரு இஷிபா குடும்பங்களின் பணச்சுமையைக் குறைக்கும் வகையில் பலதரப்பட்ட கொள்கைகளைக் கொண்டுவந்தார்.
குழந்தை வளர்ப்புக்கான சலுகைகளை விரிவுபடுத்துதல், உயர்கல்வியில் துணைப்பாட வகுப்புகளை இலவசமாக்குதல் போன்றவையாகும்.
பெற்றோர் இருவருக்கும் சம்பளத்துடன் கூடிய விடுப்பு, வேலையிடத்தில் குழந்தைப் பராமரிப்பு வசதிகள் போன்ற ஏற்பாடுகளும் செய்யப்பட்டன.
        



                        
                            
