வாழ்வியல்

ஜீரண கோளாறு – சித்த மருத்துவத்தில் தீர்வு

நம் உண்ணும் உணவு உடனடியாக செரிமானம் ஆக வேண்டும். நாம் உண்ணும் உணவை உடல் உறிஞ்சக்கூடிய சிறிய கூறுகளாக உடைக்கும் செயல்முறையாகும்.

இந்த செயல்முறை வாய், வயிறு, சிறுகுடல் மற்றும் பெருங்குடல் உள்ளிட்ட செரிமான மண்டலத்தில் நடைபெறுகிறது. அவ்வாறு செரிமானம் ஆகவில்லை என்றால் அதனை அஜீரணம் என்று சொல்வார்கள். அஜீரண கோளாறு ஏற்படும்போடு உடல் பல்வேறு பிரச்னைகளையும் சந்திக்க நேரிடும்.

உணவு சரியாக செரிமானம் ஆகவில்லை என்றால், வயிற்று வலி அல்லது அசௌகரியம், நெஞ்செரிச்சல், வாய் புளித்தல், குமட்டல் அல்லது வாந்தி, வயிற்று உப்புசம், அடிக்கடி ஏப்பம் வருவது, பசியின்மை, வாயுத்தொல்லை உள்ளிட்ட அறிகுறிகள் தெரியவரும்.

அதிக காரமான, புளிப்பான அல்லது மசாலா நிறைந்த உணவுகளை உட்கொள்ளுதல், அதிக எண்ணெய் மற்றும் கொழுப்பு நிறைந்த உணவுகள். அளவுக்கு அதிகமாக அல்லது மிக வேகமாக சாப்பிடுவது. சரியான நேரத்தில் சாப்பிடாதது உள்ளிட்ட காரணங்களால் இந்த அஜீரண கோளாறு ஏற்படலாம்.

இந்த அஜீரணம் மற்றும் வாயுத்தொல்லையை சரி செய்ய சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் ஒரு மூலிகை தான் வாய்விளங்கம். பார்ப்பதற்கு மிளகு போலவே இருக்கும் இந்த மூலிகை உடலில் இருக்கும் வாயுக்களை நீக்கும். கிருமிகளை நீக்கும் பண்பு இந்த வாய்விளங்கத்திற்கு உண்டு. வயிற்றில் இருக்கும் புழுக்களை நீக்கும். செரிமானத்தை மேம்படுத்துதல், உடல் பருமனை கட்டுப்படுத்துதல், சரும நோய்களுக்கு சிகிச்சையளித்தல், நரம்பு மண்டலத்தை வலுப்படுத்துதல் போன்ற பல நன்மைகளை இந்த வாய்விளங்கம் கொடுக்கும்.

(Visited 6 times, 1 visits today)

SR

About Author

You may also like

woman exercising
வாழ்வியல்

ஸ்கிப்பிங் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

ஸ்கிப்பிங் செய்வதால் பாரிய அளவு நன்மைகள் உடலுக்கு கிடைக்கின்றது. ஸ்கிப்பிங் என்பது ஆரோக்கியமான உடற்பயிற்சி போன்றது. இது நீங்கள் தொடர்ந்து சுவாசிக்க உதவுகிறது மற்றும் இதயத்தை பலப்படுத்துகிறது.
vegetable and meat
வாழ்வியல்

ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறதா : இந்த உணவுகளை எடுத்துகொள்ளுங்கள்!

ஒருவருக்கு ஹீமோகுளோபின் தேவையான அளவிற்கு இருப்பதை விட குறைவாக இருந்தால் அவர் எப்போதும் சோர்வாக காணப்படுவார். இதைத் தவிர உடல் வலிமையின்மைஇ சருமம் மஞ்சள் நிறமாதல்,  அசாதாரமான
error: Content is protected !!