உலக அழகி போட்டி! காலிறுதிப் போட்டியாளர்களின் பெயர் அறிவிப்பு
																																		மிஸ் வேர்ல்ட் காலிறுதிப் போட்டியாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
ஆசியா, ஐரோப்பா, ஆப்பிரிக்கா மற்றும் அமெரிக்காவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 40 பேரில் இலங்கையின் அனுதி குணசேகரா பெயர் அறிவிக்கப்படவில்லை
72ஆண்டு கால உலக அழகி போட்டி வரலாற்றில் Head-to-Head Challenge பிரிவில் இறுதி சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இலங்கை போட்டியாளராக அனுதி இடம்பிடித்துள்ளார்.
மேலும், அனுதியின் மற்றொரு தனித்துவமான வெற்றியாக, இந்த முறை உலக அழகி போட்டியில் இதுவரை நடைபெற்ற இரண்டு போட்டி பிரிவுகளிலும் இறுதி சுற்றுக்கு வந்த ஆசியாவின் ஒரே போட்டியாளராகவும் இவர் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் மல்டிமீடியா & நேரடிப் போட்டிகளில் வலுவான ஓட்டத்தைப் பெற்றிருந்தாலும், இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை அவர் தவறவிடுகின்றார்.

(Visited 6 times, 1 visits today)
                                    
        



                        
                            
