செய்தி வட அமெரிக்கா

புதிய மாணவர்களுக்கான விசா நேர்காணல்களை உடனடியாக நிறுத்துமாறு டிரம்ப் உத்தரவு

புதிய மாணவர்களுக்கான விசா நேர்காணல்களை நிறுத்துமாறு தனது வெளிநாட்டுத் தூதரகங்களுக்கு ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

வெளிநாட்டு மாணவர்களின் சமூக ஊடகப் பக்கங்களைச் சோதனை செய்ய அமெரிக்க வெளியுறவு அமைச்சு தயாராகி வருகின்றது. இந்த நிலையில் அந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

டிரம்ப் நிர்வாகம் மாணவர்களை நாடு கடத்தும் முயற்சிகளைத் தீவிரப்படுத்தும் நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குடிநுழைவுத் திட்டங்களை நிறைவேற்றும் முயற்சிகளில் அதுவும் அடங்கும். வெளிநாட்டு மாணவர்களுக்கு ஆதரவாக ஹார்வர்ட் பல்கலைக்கழக மாணவர்கள், பேராசிரியர்கள் உட்பட நூற்றுக்கணக்கானோர் போராட்டம் நடத்தினர்.

பல்கலைக்கழகத்திற்கு நிதி வழங்குவதை நிறுத்த டிரம்ப் நிர்வாகம் எடுக்கும் முயசிகளுக்கு எதிராகவும் ஏற்கனவே திட்டமிடப்பட்ட விசா நேர்காணல்களை தற்போதைய விதிமுறைகளுக்கு ஏற்பத் தொடரலாம்.

ஆனால் திட்டமிடப்படாத நேர்காணல்களைத் தொடர முடியாது என்று கூறப்பட்டுள்ளது.

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!