டெலிகிராம் நிறுவனர் பாவெல் டுரோவின் நோர்வே பயணத்திற்கு தடை விதித்த பிரெஞ்சு நீதிமன்றம்

டெலிகிராம் செயலியின் நிறுவனர் பாவெல் டுரோவுக்கு புதிய சிக்கல் எழுந்துள்ளது.
மனித உரிமை அமைப்பு ஒன்று நடத்தும் மாநாட்டில் கலந்துகொள்ள அவர் பிரான்சிலிருந்து நார்வே செல்ல அனுமதி கேட்டார். அதைப் பிரெஞ்சு நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.இந்தத் தகவலை மாநாட்டை நடத்தும் அமைப்பு தெரிவித்தது.
40 வயதான டுரோவ், கடந்த ஆண்டு பாரிசில் தடுத்துவைக்கப்பட்டார். சட்டவிரோதத் தகவல்கள் ‘டெலிகிராம்’ல் இடம்பெறுவதாக அவரிடம் விசாரிக்கப்படுகிறது.
டுரோவ், மே 27ஆம்திகதி ஆஸ்லோ விடுதலை மாநாட்டில் சுதந்திரப் பேச்சு, மின்னிலக்க உரிமைகள் உள்ளிட்ட தலைப்புகளில் பேசவிருந்தார்.
நார்வே செல்ல அனுமதி கிடைக்காததால் அவர் இணையம் வழி தமது உரையை வழங்குவார் என்று மாநாட்டின் ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.
இது மிகவும் ஏமாற்றம் தருகிறது, டுரோவ் போலத் தொழில்முனைவர்களின் உரை இதுபோன்ற மாநாடுகளுக்குப் பெரும் பலமாக இருக்கும் என்று ஏற்பாட்டுக் குழு தெரிவித்தது.
கடந்த மார்ச் மாதம் டுரோவுக்கு பிரானிஸில் இருந்து துபாய்க்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ‘டெலிகிராம்’ நிறுவனம் துபாயைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது.ஆனால் திடீரெனக் கடந்த வாரம் டுரோவ் பிரான்சைவிட்டு வெளியேறத் தடை விதிக்கப்பட்டது. இதனால் அவரின் அமெரிக்கப் பயணம் ரத்தானது.