உக்ரேன் தலைநகர் மீது ரஷ்யா தீவிர தாக்குதல் – 3 பேர் பலி

உக்ரேன் தலைநகர் கிவ் மீது ரஷ்யா பாரிய தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு ஜனாதிபதி வொளடிமீர் செலன்ஸ்கீ தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலை அடுத்து ரஷ்யா மீது கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
உக்ரைன் மீது இன்று அதிகாலை ரஷ்யா நடத்திய தாக்குதலில் 3 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 11 பேர் காயமடைந்துள்ளது.
உக்ரைனின் கியேவ் மீது ரஷ்யா 250 ஆளில்லா விமானங்கள் மற்றும் 14 ஏவுகணைகளை ஏவியதாகவும் அவற்றில், 6 ஏவுகணைகள் மற்றும் 245 ஆளில்லா விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் உக்ரைனின் விமானப்படை தெரிவித்துள்ளது.
(Visited 2 times, 2 visits today)