கொழும்பு வாழ் மக்களுக்கு முக்கிய அறிவிப்பு

அம்பத்தலை நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முன்னெடுக்கப்படவுள்ள அத்தியாவசிய மேம்படுத்தல் நடவடிக்கை காரணமாக, இன்றைய தினம் கொழும்பின் பல இடங்களில் நீர் விநியோகம் தடைப்படும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு 1 முதல் 15 வரையிலும், கோட்டே, கடுவலை, பத்தரமுல்லை, கொலன்னாவை, கொட்டிக்காவத்தை, முல்லேரியா, ஐ.டி.எச். பிரதேசம், மஹரகம, தெஹிவளை, கல்கிஸ்ஸை, மொரட்டுவை, மற்றும் இரத்மலானை ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் தடைப்படும் என அந்த சபை குறிப்பிட்டுள்ளது.
அதற்கமைய, குறித்த பகுதிகளில் இன்று காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரையான 12 மணி நேரத்துக்கு நீர் விநியோகத் தடை அமுலில் இருக்கும் என, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.
(Visited 2 times, 2 visits today)