பிரித்தானியாவில் மில்லியன் கணக்கானோருக்கு வழங்கப்படும் கொடுப்பனவு
பிரித்தானியாவில் ஆறு மில்லியனுக்கும் அதிகமான ஊனமுற்றோருக்கு உறுதியளிக்கப்பட்ட 150 பவுண்ட் கொடுப்பனவு ஜூன் மாதம் முதல் வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.
வாழ்க்கைச் செலவு நெருக்கடிக்கு உதவுவதற்காக இந்த கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாக அரசாங்கம் உறுதியளித்துள்ளது.
ஜனவரி மாதம் வேலை மற்றும் ஓய்வூதியத் துறையால் அறிவிக்கப்பட்ட வாழ்க்கைச் செலவு ஆதரவுப் கொடுப்பனவின் ஒரு பகுதியாக இந்தப் பணம் வழங்கப்படவுள்ளது.
இதன் மூலம் 12 மாதங்களில் மக்கள் 1,350 பவுண்ட் வரை பெறுவார்கள் எனவும் இது தங்களின் நெருக்கடியான வாழ்க்கை செலவை சமாளிப்பதற்கு உதவும் எனவம் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அந்த அதிகபட்ச எண்ணிக்கையில், சோதனை செய்யப்பட்ட பலன்களைப் பெறுபவர்களுக்கு மொத்தம் 900 பவுண்ட் மதிப்புள்ள மூன்று கொடுப்பனவுகள் வழங்கப்படவுள்ளது.
அதில் 8 மில்லியனுக்கும் அதிகமான ஓய்வூதியம் பெறுபவர்களுக்கு 300 பவுண்ட் மற்றும் ஊனமுற்றவர்களுக்கு அறிவிக்கப்பட்ட 150 பவுண்ட் தொகை ஆகியவை அடங்கும் என குறிப்பிடப்படுகின்றது.
ஜூன் மாதம் 20 முதல் 150 பவுண்டுகளை ஒரே நேரத்தில் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்.
எப்படியிருப்பினும் அந்தத் திகதியில் அனைவருக்கும் பணம் கிடைக்காது எனவும் பகுதி பகுதியாகவே அவை கிடைக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.