பேங்கொக்கிற்குப் புறப்பட்ட AirAsia விமானத்தில் பதற்றத்தை ஏற்படுத்திய பயணி

தாய்லந்தின் புக்கெட் தீவிலுள்ள சர்வதேச விமான நிலையத்தில் இருந்து பேங்கொக்கிற்குப் புறப்பட்ட AirAsia விமானத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக கூறியதால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
ஊழியர் உடனடியாக உடனடியாக விமானியிடம் தகவல் அளித்தார்.
விமானத்தை ஓடுபாதையில் செலுத்திய விமானி அதை மீண்டும் முனையத்துக்கு அருகே திருப்பிவிடப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த 200 பேரும் வெளியேற்றப்பட்டனர்.
விமான நிலைய அதிகாரிகளும் ராணுவ அதிகாரிகளும் விமானத்தைச் சுற்றி வளைத்தனர். அவர்கள் விமானத்தில் இருந்த பெட்டிகள், சரக்குகள், இருக்கைகள் ஆகியவற்றை விரிவாகச் சோதித்தனர்.
சுமார் 3 மணி நேரச் சோதனைக்குப் பிறகே விமானத்தில் வெடிகுண்டு இல்லை என்று அதிகாரிகள் உறுதிசெய்தனர்.
வெடிகுண்டு இருப்பதாக கூறிய நபர் பின்னர் கைதுசெய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட பயணிகளுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன.